என்னிடம்
அது வேண்டும் என்பர்
இது இல்லை என்பர்
என்னைச்
சிலர் நல்லவன் என்பர்
பலர் கெட்டவன் என்பர்
உன் கருணையே
கருணை என்பர்
அவர்களே
மீண்டும் என்னைக்
கருணையற்றவன் என்பர்
நான் இல்லவே இல்லை
என்பர் சிலர்
நான் யார்?
'எல்லாம் வல்லப் பரம் பொருள் நான்'!
பல முறை என்னைப் பழிப்பவரைப்
பார்த்து விடைக் கூற முயல்வேன்
ஆயினும் நான் இல்லை எனப் பழிப்பவரின்
நம்பிக்கையை சிதைக்க முடியவில்லை
ஆதலால் கல்லாகவே இருக்கின்றேன்
ஏனெனில் நான் தான்
'எல்லாம் வல்ல பரம் பொருள் ஆயிற்றே'!
Great Great
ReplyDeleteநன்றி...
ReplyDelete