'தீட்டு'... இந்த வார்த்தையை கண்டுபிடித்தவர் யாராக இருந்தாலும் அவரை நான் முழு மனதுடம் பழிக்கிறேன்! சாஸ்திர சம்பிரதாயங்கள் எனப்படும் மனிதனுக்கு சிறிதும் பயன்படாத விஷயங்களை உண்டாக்கி அதில் மனிதனை முழுதாக இழக்க செய்ததே நம் முன்னோர்களின் சாதனை எனக் கருதலாம். கடவுளால் உருவாக்கப்பட்டவன் மனிதன்,மனிதனால் உருவாக்கப்பட்டது இந்த சாஸ்திரமும் சம்பிரதாயமும்.ஆயினும் இப்பொழுது மனிதனும் கடவுளும் அவைகளுக்கு கட்டுப்படுவதுதான் கொடுமையிலும் கொடுமை..அன்று விரதம் இருக்கலாம் இன்று கூடாது எனவும் இன்று இந்த கடவுளுக்கு உகந்த நாள் அவருக்கு விளக்கு ஏற்றினால் விசேஷம் என்பனவெல்லாம் சாஸ்திர சம்பிரதாயங்களில் அடங்கும்.கடவுள் விஷயங்களை ஒரு பக்கம் ஒதுக்கி விட்டு மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கு வருவோம்.மனிதனின் பிறப்பு,இறப்பு இதன் நடுவில் நடக்கும் அனைத்து சுப/அசுப காரியங்களும் இந்த சம்பிரதாயங்கள் மூலமாகவே நடைபெறுகிறது.பிறந்தால் ஒரு சடங்கு, வளர்ந்தால் ஒன்று,பெயர் வைக்க ஒன்று என இன்னும் பல உள்ளன இதில் பெண் பிள்ளைகளின் நிலையோ மிகக் கொடுமை பூப்படைதலும் பின்பு அவர்களுக்கு ஏற்படும் கட்டுப்பாடுகளும் உண்மையில் நரகத்திலும் நிகழாது இவை அனைத்தையும் பொறுத்துக்கொள்ளலாம் ஆனால் ஒரு வீட்டில் மரணம் நிகழ்ந்த பிறகு அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு விதிக்கப்படும் கட்டளைகள் தான் மிக மிகக் கொடுமை.. இறந்தவர் நிம்மதியாய் போய்விடுவார் 'சம்பிரதாய ஆடுகள்' உயிரோடு இருப்பவர்களை விடுவதில்லை..இறந்தவரின் சொந்தங்கள் அனைவரும் பத்து நாட்கள் கோயில்களுக்கு செல்ல கூடாது அவர்களை தொடுதல் மிகப் பெரிய பாவம்,தொட்டு விட்டால் சித்திர குப்தர் எண்ணெய் சட்டியில் போட்டுவிடுவாரோ? ஆடுகளுக்குகே வெளிச்சம்.. இறந்தவரின் குடும்பத்தார் யாதொரு பூஜைகளுக்கும் சுப காரியங்களுக்கும் பத்து நாட்கள் செல்லக் கூடாது..இவை பத்து நாட்களோடு முடிவதில்லை. ஒரு வருடம் வரை அவர்கள் எந்த பண்டிகையையும் கொண்டாடுவதர்க்கில்லை..
இந்த சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்றாதார் ஒன்றும் கெட்டுவிடப்போவதில்லை..மனிதனை சீர்படுத்த இவை அவசியமே அன்றி மனிதனின் மனதை சீர்குலைக்க அல்ல என்பதை இந்த 'சம்பிரதாய ஆடுகள்' புரிந்துகொள்ள வேண்டும்..எதிர்கால சந்ததியர் இந்த கருமங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு மட்டுமல்லாமல் ஆடுகளையும் ஒழிப்பர் என நம்புவோமாக !!!!!!
இந்த சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்றாதார் ஒன்றும் கெட்டுவிடப்போவதில்லை..மனிதனை சீர்படுத்த இவை அவசியமே அன்றி மனிதனின் மனதை சீர்குலைக்க அல்ல என்பதை இந்த 'சம்பிரதாய ஆடுகள்' புரிந்துகொள்ள வேண்டும்..எதிர்கால சந்ததியர் இந்த கருமங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு மட்டுமல்லாமல் ஆடுகளையும் ஒழிப்பர் என நம்புவோமாக !!!!!!
No comments:
Post a Comment